கனமழையால் கீழடி அகழாய்வு பாதிப்பு!

  அனிதா   | Last Modified : 30 Sep, 2019 03:01 pm
heavy-rain-affects-the-excavation

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பெய்த கனமழை காரணமாக அகழாய்வு பணி பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழர்களின் அரிய பொக்கிஷமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வின் மூலம் சங்க கால மக்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை ஆகியவை வெளிசத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் கனமழை காரணமாக அகழாய்விற்காக தோண்டப்பட்ட 52 குழிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குழிகளில் உள்ள மழை நீர் முழுமையாக அகற்றப்பட்ட பின் அகழாய்வு பணிகள் தொடரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close