சமுதாய நலக்கூடங்களில் முன்பதிவு நிறுத்திவைப்பு 

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 10:29 pm
reservation-stoped-community-welfare-centers

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் சமுதாய நலக்கூடங்களில் திருமண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில்,  சமுதாய நலக்கூடங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நிவாரண பணிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close