சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி!

  அனிதா   | Last Modified : 01 Oct, 2019 09:14 am
permission-to-tourists-take-a-bath-at-suruli-falls

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. சுருளி பகுதியில் உள்ள புண்ணியதலங்கள், கோடிலிங்கம், திராட்சை தோட்டம் இவைகளை கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் அருவியில் வந்து குளியல் போடாமல் திரும்புவதில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close