தமிழகத்தில் பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் மறைய தொடங்கியுள்ளன; வானதி சீனிவாசன்

  அனிதா   | Last Modified : 01 Oct, 2019 09:59 am
protests-against-the-pm-in-tamil-nadu-have-begun-to-fade-vanathi-srinivasan

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டங்கள் எல்லாம் இப்போது மறைய தொடங்கியுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடத்தி நேற்றே முடிவெடுக்கப்பட்டுவிட்டதாகவும், அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி தொடர்வதாகவும் தெரிவித்தார். மேலும், இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை பாஜக ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் கூறினார். தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டங்கள் எல்லாம் இப்போது மறைய தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close