ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்த சோகம்

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2019 03:57 pm
the-tragedy-of-the-death-of-3-little-girls-drowned-in-the-river

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் அருகே கல்வாரிசெப்பல் பகுதியில் உள்ள ஆற்றில் தனியார் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் அனுசுகா, சித்ரா, ஜெசுப்ரியா ஆகியோர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, மூவரும் திடீரென ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் நீர்நிலைகளில் மூழ்கி 10 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close