தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2019 08:24 pm
union-government-allocates-6-lakh-tonnes-of-urea-to-tamil-nadu

சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், ‘45 கிலோ யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1.74 லட்சம் டன் யூரியா இருப்பில் உள்ளது. விவசாயிகள் ஆதார் அட்டையுடன் சென்று உரவிற்பனை நிலையங்களில் தேவையான யூரியாவை பெற்றுக்கொள்ளலாம். உழவன் கைபேசி செயலி மூலம் கூட்டுறவு, தனியார் உர விற்பனை நிலையங்களில் உர இருப்பை அறிந்து கொள்ளலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close