திருச்சி: பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளை!

  அனிதா   | Last Modified : 02 Oct, 2019 11:15 am
trichy-multi-crore-jewelery-looted-in-famous-jewelery-shop

திருச்சியில் சத்திரம் பேருந்தி நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில்  பல கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 35 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், மோப்ப நாய்கள் உதவியுடனும், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் கொள்ளையர்களை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close