மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஆய்வு!

  அனிதா   | Last Modified : 02 Oct, 2019 11:47 am
cm-s-review-in-mamallapuram

பிரதமர், சீன அதிபர் வருகையையொட்டி சென்னை மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை வரவுள்ளார். சீன அதிபரை வரவேற்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, சீன அதிபருடன் புரதான சின்னங்களை பார்வையிடவுள்ளார். மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களின் முக்கிய சந்திப்பு நிகழவிருப்பதால் மாமல்லபுரத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டதோடு, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டி, மற்றும் பெட்டிக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதனால் மாமல்லபுரம் தற்போது புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. 

இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான விடுதியில் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close