சீன அதிபர் வருகை: மக்களுக்கு பாதிப்பின்றி பேனர்கள் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 12:41 pm
china-president-visits-court-orders-to-place-banners-without-harm-to-people

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பேனர் வைக்க அனுமதி கோரிய வழக்கில் மக்களுக்கு பாதிப்பின்றி பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

அக்டோபர் 11ஆம் தேதி சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதையொட்டி தலைவர்களை வரவேற்பதற்காக பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய, மாநில அரசுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷஷாயி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர்கள் வைக்க திட்டமிடப்பட்ட வரைப்படம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிமுறைகளை பின்பற்றி உரிய பாதுகாப்புடன் மக்களுக்கு பாதிப்பின்றி பேனர்கள் வைக்க வேண்டும் எனவும், ராட்சத பேனர்கள் வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர். மேலும், பேனர் வைப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close