தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்: அமைச்சர் துரைக்கண்ணு

  அனிதா   | Last Modified : 03 Oct, 2019 03:39 pm
liquor-will-be-gradually-brought-down-in-tamil-nadu-minister-duraikannu

ஆந்திராவை போன்று தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்குக்கான நடைமுறை செயல்படுத்தப்படும் என வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தில் கோட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய பேருந்துகளை அமைச்சர் துரைக்கண்ணு கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "ஆந்திராவை போன்று தமிழகத்திலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி படிப்படியாக மதுவிலக்குக்கான நடை முறைகள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தெரிவித்த அவர், எதிர்க்கட்சியினர் தோல்வி பயம் காரணமாக அரசு மீது குற்றம் சாட்டுவதாக கூறினார். மேலும், நெல் கொள்முதலுக்கான புதிய  விலை சில தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close