அதிர்ச்சி: பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை 

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 11:38 am
shock-mother-commits-suicide-after-throwing-children-into-well

ஒசூரின் தேன்கனிகோட்டை அருகே குடும்பத் தகராறில் தனது 2 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் கிணற்றில் விழுந்து தற்கோலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள கொடரை மலைக்கிராமத்தில் தாய் நாகம்மா, அவரது பிள்ளைகள் பிரேம்குமார் (3), மகள் பிரியம்மா (7) கிணற்றில் வீசி,  தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் நாகம்மா தற்கொலை முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close