சிலை கடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

  அனிதா   | Last Modified : 05 Oct, 2019 10:01 am
heavy-action-by-statue-abduction

தமிழகத்தில் யார் சிலை கடத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் யார் சிலை கடத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மத்திய அரசு உதவியுடன் தமிழகத்திற்கு மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் உள்ள பழைய அருங்காட்சியகங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்படும் என தெரிவித்த அவர், புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க, பழைய அருங்காட்சியகங்களை ஏற்படுத்த மத்திய அரசிடம் ரூ. 300 கோடி கேட்கப்பட்டுள்ளதாகவும், மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.300 கோடி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close