முதல்வர், துணை முதல்வர் ஆயுத பூஜை வாழ்த்து 

  Newstm Desk   | Last Modified : 06 Oct, 2019 12:51 pm
chief-minister-deputy-chief-minister-wishes-to-ayudha-poojai

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிற கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து நலன்கள், வளங்களைப் பெற்று சீரோடும், சிறப்போடும் மனமகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமியும், ஆயுதபூஜை, விஜயதசமி திருநாளில் வெற்றிமேல் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்தியாவை உலகின் முதன்மை நாடாக உயர்த்த அன்னை சக்தி அருள்புரியட்டும் என்றும் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் எனும் நம்பிக்கையுடன் அனைவரும் நலமும், வளமும் பெற்றிட வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என்று தினகரனும் கூறியுள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close