மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பபெற வேண்டும்: விஜயகாந்த்

  அனிதா   | Last Modified : 06 Oct, 2019 03:08 pm
49-cases-of-sedition-including-mani-ratnam-s-must-be-withdrawn-vijayakanth

இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த கடந்த ஜூலை மாதம்  'பசு வதை தடுப்பு' என்னும் போர்வையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை  தடுக்கும்  வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களான  மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவியது.

இந்த கடிதத்தை எதிர்த்து பீகாரை  சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. 

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேமுதி தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக கடிதம் எழுதியதை தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல என்றும், உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close