சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறதா?

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 01:52 pm
are-schools-and-colleges-closing-in-chennai

பிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு, சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக வெளியான தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜீ ஜின் பிங் வரும் 11ஆம் தேதி சென்னை வரவுள்ளார். அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை வருகிறார். இதை தொடர்ந்து இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிற்ப கலைகளை பார்வையிட்டு, புகைப்படங்கள் எடுத்துகொள்கின்றனர். மேலும், இருநாட்டு நல்லுறவு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இந்த நிலையில், பிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு,சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது.

தற்போது, இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை அளித்த விளக்கத்தில், ‘பிரதமர், சீன அதிபர் வருகையையொட்டி, சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறாகும். காவல்துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருதலைவர்களின் வருகை தொடர்பாக பொதுமக்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை’ என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், போக்குவரத்து நிறுத்தம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறின்றி பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close