எனது சகாக்கள் 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்: கமல்

  அனிதா   | Last Modified : 08 Oct, 2019 03:30 pm
uphold-justice-with-democracy-and-quash-the-case

எனது சகாக்கள் 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பாராளுமன்றத்தில் அவர் கூறிய அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அப்படி இருக்கும் போது மாநிலங்கள் அதனை பின்பற்ற வேண்டாமா? பிரதமரின் விருப்பத்திற்கு மாறாக எனது சகாக்கள் 49 பேர் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். ஜனநாயகத்தில் நீதியை நிலைநாட்ட, பீகாரில் பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close