நெல்லை, செங்கோட்டை ரயில்கள் எழும்பூரில் புறப்படாது!

  அனிதா   | Last Modified : 10 Oct, 2019 01:28 pm
nellai-and-sengottai-trains-will-not-depart-from-egmore

நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் டிசம்.7 வரை சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், சென்னையிலிருந்து நெல்லை மற்றும் செங்கோட்டை செல்லும் ரயில்கள் இன்று (அக்.10) முதல் டிசம் 7 வரை எழும்பூரில் இருந்து புறப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சென்னை - நெல்லை (12631) எக்ஸ்பிரஸ் மற்றும், சென்னை - செங்கோட்டை (12661) ஆகிய ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என்றும், நெல்லை - சென்னை (12632), செங்கோட்டை - சென்னை (12662) ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close