சென்னையில் பரபரப்பு..பெண் மீது வெடிகுண்டு வீச்சு

  Newstm Desk   | Last Modified : 10 Oct, 2019 01:49 pm
bombing-in-chennai

நாளை சீன அதிபர் தமிழகம் வரவுள்ள நிலையில் சென்னையில் பட்டப்பகலில் பெண் மீது நாட்டுவெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் ஆட்டோவில் வந்த பெண் மீது ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் கொல்ல முயற்சித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண், ரவுடி தோட்டம் சேகரின் 3ஆவது மனைவி என தெரியவந்துள்ளது. தப்பியோடிய ஆறு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் பட்டப்பகலில் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close