நாட்டு வெடிகுண்டு வீச்சு: பெண் வழக்கறிஞர் கைது 

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 09:57 am
woman-s-lawyer-arrested-for-bomb-blast

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் நேற்று ஆட்டோவில் வந்த பெண் மீது ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் கொல்ல முயற்சித்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ஆறு பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில், ரவுடி அழகுராஜாவின் தாயான பெண் வழக்கறிஞர் மலர்கொடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மலர்கொடியுடன் கூட்டாளிகள் மணிகண்டன், விஜயகுமாரும் கைதாகினர். இதையடுத்து, கைதான பெண் வழக்கறிஞர் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close