சீன அதிபருடனான சந்திப்பை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் சீன அதிபருடன் பல்வேறு இடங்களை சுற்று பார்த்து, இரு நாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு இன்று மதியம் நிறைவடைந்ததையடுத்து, கோவளம் ஹோட்டலில் இருந்து பிரதமர் மோடி சென்னை புறப்பட்டார்.
திருவிடந்தையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திருப்பிய பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை வழி அனுப்பி வைத்தனர்.
Newstm.in