கோவையில் ரூ.14.09 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2019 10:31 am
rs-14-09-lakh-counterfeit-notes-seized-in-coimbatore

கோவையில் கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக இருவர் கைதான சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை காந்தி பூங்கா பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விடும்போது பிடிபட்ட பிரவீன், பூபதி கொடுத்த தகவலின் பேரில் கள்ளநோட்டை அச்சடித்ததாக தன்ராஜ், ரஞ்சித் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் ரூ.14.09 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close