வடகிழக்கு பருவமழை அக்.17ல் தொடங்க வாய்ப்பு!

  அனிதா   | Last Modified : 13 Oct, 2019 01:56 pm
weather-report

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ஆம் தேதியையொட்டி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம்  மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோபி செட்டிபாளயத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சங்ககிரி, பவானி, சேந்தமங்கலத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close