தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 8 வயது சிறுவன் பலி!

  அனிதா   | Last Modified : 13 Oct, 2019 03:14 pm
eight-year-old-boy-dies-after-by-a-pack-of-stray-dogs

நெல்லையில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் சந்தோஷ் (8). இவர் அவரது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வரும் சிறுவன், மாலையில் விளையாடுவதற்காக மீண்டும் பள்ளிக்கு செல்வது வழக்கம். சிறுவன் விரைவாக பள்ளிக்கு செல்வதற்காக சில நேரங்களில் சாலைவழியை பயன்படுத்தாமல், வயல்வெளியை பயன்படுத்துவது உண்டு. 

அதேபோன்று கடந்த வெள்ளியன்று சிறுவன் வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றிவிட்டு விளையாடுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் கலக்கமடைந்த பெற்றோர், கிராம மக்கள் உதவிடன் சிறுவனை தேடியுள்ளனர். அப்போது வயல்வெளிகளில் தேடி சென்றபோது, அங்கு சில வெறிநாய்கள் சுற்றி நிற்பதை கண்ட கிராமமக்கள் லைட் அடித்து பார்த்தபோது, சிறுவனை அவைகள் கடித்து கொண்டிருந்தன. 

அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் மற்றும் சிறுவனின் தந்தை சேதுபதி ஆகியோர் நாய்களை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர். உடனடியாக உள்ளூர் மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். தெருநாய்கள் கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே, சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close