தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் இதுவரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் ரூ.2.55 கோடி வசூலாகியுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை தகவல் கூறியுள்ளது.
newstm.in