இன்றுடன் இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவு!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 10:22 am
the-by-election-campaign-ends-today

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் விதிமுறைப்படி இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. 

இன்று மாலை 6 மணிக்கு மேல் இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் அல்லாதோர் மற்றும் வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களிலும் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்படுவதாகவும் மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close