தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 12:59 pm
rain-will-be-continue-for-4-days-in-tamil-nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், "தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கும், காவிரி டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 

அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள்  மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும், சென்னையில் அவ்வபோது சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close