மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் கட்டணம்!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 01:58 pm
first-charge-today-to-visit-the-vennai-urundai-rock

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்றுமுதல் கட்டணம்  வசூலிக்கப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடம் மாமல்லபுரம். பாறைகளில் செதுக்கப்பட்ட குகை கோயில்கள், சிற்பங்கள் என ஏராளமான கலை நயத்தோடு காட்சியளிக்கும் மாமல்லபுரத்தினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு வியந்து செல்கின்றனர். இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்று முதல் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளுக்கு ரூ.40, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படும் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது. 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close