தமிழகம், புதுச்சேரியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

  அனிதா   | Last Modified : 21 Oct, 2019 08:50 am
voting-begins-in-tamil-nadu-puducherry

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங், சார்பில் புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சர்பில் பிரவீனா உள்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close