மழை காரணமாக வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படாது: சத்யபிரதா சாஹூ

  அனிதா   | Last Modified : 21 Oct, 2019 11:40 am
voting-time-will-not-be-extended-due-to-rain-satyaprata-sahoo

மழை காரணமாக வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படாது என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமிரா மூலம் நேரலையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு இடங்களில் மழை காரணமாக வெப் கேமிரா செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மழை காரணமாக வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படாது என சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close