கன மழை எச்சரிக்கை: முதலமைச்சர் உத்தரவு!

  அனிதா   | Last Modified : 21 Oct, 2019 01:28 pm
heavy-rain-warning-chief-minister-s-order

தென் மாவட்டங்களில் மழை மற்றும் அணை நிலவரங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, தென் மாவட்டங்களில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மழை மற்றும் அணைகளின் நிலவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும்,  வடகிழக்கு பருமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close