காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: இந்திய வானிலை

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 08:57 am
heavy-rain-in-tamil-nadu

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடதமிழக மற்றும் ஆந்திர கடல்பகுதி அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஓமனை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close