காரைக்கால்,சேலம், ராமநாதபுரம் - பள்ளிகளுக்கு விடுமுறை

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 09:11 am
karaikal-salem-ramanathapuram-holidays-for-schools

கனமழை காரணமாக காரைக்கால், சேலம், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், காரைக்கால், சேலம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close