வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கீழே விழும் மரங்களை அகற்ற, நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்புக்குழு குறுகிய காலஅளவில் மழைபாதித்த பகுதியை அடைய உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், மருந்துகளை இருப்பு வைக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 'நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்கவும், பருவமழை காரணமாக தொற்றுநோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், மழைக்காலத்தில் உயிர்சேதம், பொருட்சேதத்தை தடுக்கவும் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
newstm