போலீஸ் விரட்டிய போது கிணற்றில் விழுந்து ரவுடி உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2019 06:06 pm
rowdy-dies-as-police-chase-down-well

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் விரட்டிச் சென்றபோது கிணற்றில் விழுந்து ரவுடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வடமாவந்தல் கிராமத்தில் கொலை, கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி பாட்டில் மணி பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பதுங்கியிருந்த பாட்டில் மணி, அவரது கூட்டாளிகளை போலீசார் துரத்திச் சென்றனர். அப்போது ரவுடி பாட்டில் மணி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். பின்னர், பாட்டில் மணியின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close