காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2019 08:40 pm
flood-warning-for-coastal-cauvery-residents

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கன அடியாக திறக்கப்பட்டது .

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்தது. இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரவு 8 மணி அளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.

இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் கூடுதலாக திறக்கப்படும் என்றும் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும், நாளை அதிகாலை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மேட்டூர் அணை பொதுப்பணி துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

சேலம், ஈரோடு, நாமக்கல்,  கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த அறிவிப்பை அனுப்பி வைத்துள்ளதாகவும் மேட்டூர் அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close