ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை: அதிக கட்டணம் வசூல் செய்தால் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 23 Oct, 2019 11:54 am
warning-to-omni-buses

தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "போக்குவரத்து தொழிலாளர்கள் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நாளை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவிடுத்த அமைச்சர், அதிக கட்டணம் குறித்து போக்குவரத்து துறை வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும்,  நாளை முதல் சென்னையில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close