விளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

  அனிதா   | Last Modified : 23 Oct, 2019 03:33 pm
minister-alerts-to-sports-clubs

விளையாட்டு பிரிவில் தவறான வழியில் திறமையில்லாத மாணவர்களை சேர்த்தால் சங்கங்கள் கலைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை அண்ணா நூலத்தில் விளையாட்டு சங்கங்களின் தலைவர்களுடன் அமைச்சர்  செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதி, சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சேர சங்கங்கள் தவறான வழியில் செயல்படுவது அதிகரித்து வருவதாகவும்,  அவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால் சங்கங்கள் கலைக்க சட்டம் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும், மாணவர்கள் மத ரீதியாக குழு அமைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிடவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக எந்த சுற்றிக்கை வெளியிடப்பட்டாலும் முதல்வர் ஒப்புதல் பெற்றுதான் அனுப்படும் எனவும் குறிப்பிட்டார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close