ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2019 11:28 am
radhapuram-continue-to-ban-recounts-supreme-court

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 13ஆம் தேதி வரை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவுவை விட 49 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுவாக்கி எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதைதொடர்ந்து, மறுவாக்கி எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே இன்பதுரை உச்சநீதிமன்றத்தை நாடியதால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை நவம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close