இந்திய - சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு சீன தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து சீன தூதர் சன் வெய்டங் எழுதிய கடிதத்தில், ‘சீன அதிபர் மற்றும் குழுவினருக்கு வழியெங்கும் சிறப்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி சிறந்த உபசரிப்பு செய்த தமிழக அரசுக்கும், முதலமைச்சர் பழனிசாமிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சீன - இந்திய மக்களிடையே கலாச்சாரம் மற்றும் பரிமாற்றங்களையும் மென்மேலும் மேம்படுத்துவோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in