தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 

  Newstm Desk   | Last Modified : 25 Oct, 2019 03:05 pm
heavy-rain-in-tamil-nadu-weather-center

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம், மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கும், மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28,29ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், அரபிக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதாகவும், வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் கியார் என பெயரிடப்பட்ட புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close