குழந்தையை அரைமணி நேரத்தில் மீட்போம்: பேரிடர் மீட்பு படை

  அனிதா   | Last Modified : 26 Oct, 2019 03:31 pm
we-will-rescue-the-child-in-half-hour-disaster-rescue-force

குழந்தை சுர்ஜித்தை அரை மணி நேரத்தில் மீட்டுவிட வாய்ப்புள்ளதாக பேரிடர் மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சுர்ஜித்தை மீட்பதற்காக தற்போது, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். தற்போது குழந்தை இருக்கும் நிலையை வைத்து உடனடியாக குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கயிறு மூலம் குழந்தையை வெளியே எடுப்பது, சுரங்கம் அமைத்து உள்ளே சென்று குழந்தையை மீட்பது, பாம்பு வடிவிலான நவீன இயந்திரம் மூலம் குழந்தையின் இடுப்பை பிடித்து தூக்குவது என 3 வகையான நடவடிக்கைகளில் குழந்தையை மீட்பதற்கு சத்தியக்கூறுகள் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்திருந்தனர். 

ஆனால், தற்போது குழந்தை மிகவும் சோர்ந்து இருப்பதால் உடனடியாக மீட்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே முயற்சி செய்ததது போன்று குழந்தையின் கையில் கயிறை கட்டி மேல எடுப்பதற்கான பணிகளில் சற்று நவீன கருவிகளுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

குழந்தையின் கை மிக சிறியது என்பதால் கயிற்றில் சுருக்கு போடுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே 6 முறை முயற்சித்தபோது, கயிறு கழன்றதால், இந்த முறை மிக கச்சிதமாக சுருக்கு போட்ட பிறகே குழந்தையை தூக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. குழந்தையின் கையில் கச்சிதமாக சுருக்கு விழுந்து விட்டால், அரை மணியில் ஒரு மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டு விடலாம் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close