39 மணி நேரமாகியும் குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை  

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2019 09:26 am
even-after-39-hours-the-baby-has-not-yet-been-recovered

குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 39 மணி நேரமாகியும் இன்னும் மீட்கப்படவில்லை. குழந்தையை மீட்கும் பணியில் 3ஆவது நாளாக மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்துளைக் கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டு வர 3 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலமாக குழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிணற்றிலிருந்து 3 மீட்டர் தொலைவில் ரிக் இயந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு வருகிறது.
துளையிடும் பணிகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி பார்வையிட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close