குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி குறித்து அமைச்சரின் தற்போதைய தகவல் 

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2019 12:52 pm
minister-s-current-information-on-rescuing-child-surjit

குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ‘வேகமாகவும், கவனமாகவும், பாதுகாப்பாகவும் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு சார்பில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் களத்தில் உள்ளனர். நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். ரிக் மூலம் 6.3 மீட்டர் வரை தோண்டப்பட்டு தொடர்ந்து தோண்டும் பணி நடைபெறுகிறது. சக்தி வாய்ந்த இன்னொரு ரிக் வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது. 27 மீட்டரில் குழந்தையின் கைகல் ஏர் லாக் மூலம் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு கடினமான பாறைகள் இருப்பதால் தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், நேற்று முதல் குழந்தை சுர்ஜித் கைகள் அசையவில்லை; குழந்தையின் அழுகுரலும் கேட்கவில்லை என்றும், வெப்பம் இருப்பதால் குழந்தை மயக்க நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close