மீட்பு பணியில் மாற்றம்: ரிக் இயந்திரம் நிறுத்தம்

  அனிதா   | Last Modified : 27 Oct, 2019 04:14 pm
minor-change-in-recovery-process-rick-engine-stopped

ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டுவதில் காலதாமதம் ஏற்படுவதால் போர் போடும் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. 

ஆள் துளை கிணற்றில் சிக்கி இருக்கும் குழந்தையை மீட்பதற்காக சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது. பாறைகள் இருப்பதால் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பாறையை குடைந்து போர்போடும் இயந்திரம் மூலம் குழிதோண்ட திட்டமிடப்பட்டு அதற்கான இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது, 98 அடி வரை பாறையை குடையும் போர் இயந்திரம்  மூலமாக குழி தோண்டப்படவுள்ளது.  போர்வெல் இயந்திரம் மூலம் குழிதோண்டிய பின் ரிக் இயந்திரம் மூலம் அதனை அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close