மற்றொரு அதி நவீன ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்ட திட்டம்!

  அனிதா   | Last Modified : 27 Oct, 2019 06:00 pm
rescue-work-in-nadukattupalli

ஆழ்துளை கிணறு தோண்ட மற்றொரு அதி நவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. 

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து 48 மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட முயற்சியாக குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டி, சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் நிறுவனத்தின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7 மணியளவில் பணிகள் தொடங்கின. ஆனால் பாறைகள் இருப்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து மற்றொரு அதிநவீனமான ரிக் இயந்திரம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டது. ஜெர்மன் தொழில்நுட்பத்தால் ஆன இந்த இயந்திரம் 3 மடங்கு வேகத்தில் பாறையை துளையிடும் சக்தி வாய்ந்தது. தற்போது, புதிதாக வரவழைக்கப்பட்ட ரிக் இயந்திரத்தில் உதிரி பாகங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருவதால் காலதாமதம் ஏற்பட கூடாது என்பதற்காக ஏற்கனவே துளையிடப்பட்டு வரும் இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close