கடினமான பாறையால் துளையிடும் பணியில் தாமதம்!

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 08:25 am
delay-in-child-rescue

கடினமான பாறைகள் இருப்பதால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி, நடுக்காட்டு பட்டியில் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெற்று வருகிறது. குழந்தையை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்ததையடுத்து, இறுதி கட்ட நடவடிக்கையாக குழந்தையும் இருக்கும் கிணறு அருகே 2 மீட்டர் தொலைவில் மற்றொரு கிணறு அமைத்து அதில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குழந்தையின் அருகே குழி தோண்டப்படுவதால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக  நேற்று காலை நவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு காலை 7 மணியளவில் பணிகள் தொடங்கின. ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தில் பாறைகள் இருப்பதால் பணியில் தாமதம் ஏற்பட்டது. 

இதையடுத்து அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட 2வது ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. நள்ளிரவு முதல் தற்போது வரை 2வது ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் ரிக் இயந்திரம் 35 அடியும், 2 வது ரிக் இயந்திரம் 5 அடியும் குழி தோண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close