மாற்று வழியில் குழந்தையை மீட்க ஆலோசனை: சி.விஜயபாஸ்கர்

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 09:49 am
advice-on-rescuing-child-in-an-alternative-way-c-vijayabaskar

ஆழ்துளை கிணறு அமைப்பது எந்த அளவிற்கு சாத்தியமானது என்பது தெரியவில்லை என்றும், எனவே மாற்று வழியில் குழந்தையை மீட்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

நடுகம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்தது இல்லை எனவும், இயந்திரங்களே துளையிட முடியாமல் திணறுவதாகவும் குறிப்பிட்டார். ஐஐடி வல்லுநர்கள், புவியியல் வல்லுநர்கள் மண்பரிசோதனை செய்தனர். இருப்பினும் இவ்வளவு கடினமான பாறைகள் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. திட்டமிட்டபடியான ஆழத்தை எட்ட முடியவில்லை என கூறினார். இந்த ஆழ்துளை அமைக்கும் முயற்சி பலனளிக்குமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம், எனவே குழந்தையை மீட்க மாற்று வழி குறித்து ஆலோசிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close