போர்வெல் மூலம் ஆழ்துளை கிணறு தோண்ட முடிவு!

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 12:43 pm
decided-to-drill-use-borewell

கடினமான பாறைகளை ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளை உடைத்து துளையிட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக, ஆழ்துளை கிணறு  தோண்டப்பட்டு வருகிறது. கடினமான பாறைகள் இருப்பதால் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரத்தால் பாறையை உடைக்க முடியாததால், நவீன ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால், 2 வது ரிக் இயந்திரத்திலும், பாறையை உடைக்கும் போது டிரில் பிட் பழுதானதால் போர்வெல் இயந்திரம் மூலமே பணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்வெல் மூலம் பாறைகளை உடைக்கும் போது அதிர்வுகள் ஏற்பட்டு குழந்தை மேலும் ஆழத்திற்கு செல்லகூடும் என்பதால் இதுவரை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close