பக்கவாட்டு பகுதியில் துளையிடுவதுதான் சவாலானது:ராதாகிருஷ்ணன் 

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2019 07:53 pm
the-challenge-is-to-drill-in-the-lateral-area-radhakrishnan

ரிக் இயந்திரம் மூலம் குழிதோண்டி முடித்தாலும் பக்கவாட்டு பகுதியில் துளையிடுவதுதான் சவாலானது; கைகளால் துளையிடவுள்ளதால் சற்று கடினமாகவே இருக்கும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், 55 அடிக்கு கீழே மண்தன்மையுடன் கூடிய பாறைகள் இருப்பதால் குழி தோண்டும்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார்.
தற்போது போர்வெல் மூலம் துளையிடப்பட்ட பகுதிகளில் ரிக் இயந்திரத்தால் பாறைகளை குடையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குழந்தை சுஜித்தை மீட்க ரிக் இயந்திரத்தால் 63 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close