சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறு மூடல்!

  அனிதா   | Last Modified : 29 Oct, 2019 08:49 am
closed-down-borewell

குழந்தை சுர்ஜித் தவறி விழுந்து உயிரிழந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது. 

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2வயது குழந்தை சுர்ஜித் கடந்த 25ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டுமொத்த தமிழகமும் சுர்ஜித்திற்காக பிராத்தனை செய்து அவனுக்காக காத்திருந்த நிலையில் 5 நாட்களாக சுமார் 82 மணி நேரப்போராட்டத்திற்கு பின் சிறுவன் சுர்ஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். இந்த பேரதிர்ச்சி சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தை விழுந்த ஆழ்துறை கிணறு கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close